இந்தியாவின் பொறுமையினை சீண்டி பார்க்கவேண்டாம்- சீனாவுக்கு ராணுவத் தலைமை தளபதி எச்சரிக்கை!
இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சீனாவுக்கு , இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ராணுவத்தின் முதல் தலைமை தளபதியாக 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கே.எம் கரியப்பா நியமிக்கபட்டார்.
அதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் இந்திய ராணுவதினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாட்டின் 73 வது ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் ராணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே. பின்னர் விழாவில் பேசிய முகுந்த் நரவானே எல்லை பகுதியில் சதி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
லடாக்பகுதியில் வீரமரணமடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது எனவும்.எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என கூறினார்
அதேசமயம் , சீனா இந்தியாவின் பொறுமையை சோதித்து தவறை செய்ய வேண்டாம் என ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்தார்.