இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சீனாவின் உத்தரவு
இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது நாட்டுக்கு திரும்ப வேண்டுமானால் சீன தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை உலகெங்கும் பரவி வருகிறது.
பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் 2வது, 3வது அலைகள் கடுமையாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் நாடு திரும்பினர். தற்போது மீண்டும் சீனா திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்நாட்டிடம் இந்திய தூதரகமும், மாணவா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், அதுகுறித்து சாதகமான பதில் எதையும் சீனா தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா திரும்ப விரும்பும் இந்தியர்கள் அந்நாட்டின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
இதுதவிர 20 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் இந்தியா்களும் அடங்குவா் என்றும் சீன அரசு நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.