ஜுஸ் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

By Jon Jan 05, 2021 01:36 PM GMT
Report

திருச்சி மாவட்டத்தில் ஜுஸ் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதி சதீஷ்குமார்- சுகன்யா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஜீவா.

கடந்த 3ம் தேதி சதீஷ் வழக்கம் போல பணிக்கு திரும்பிய நிலையில், வீட்டில் சுகன்யாவுடன் குழந்தை இருந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை தவறுதலாக குடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா குழந்தை புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அணு குழந்தை ஜீவாக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் குழந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பெற்றோரின் கவனமின்மையால் குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.