மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் குடியரசு தினத்தில் அதற்கான விளைவுகள் தெரியும்
மத்திய அரசுடன் நாளை நடத்த உள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணி நடத்தப்போவதாக மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குடியரசு தினத்தின்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜபாட்டையில் நடைபெறும் குடியரசு அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளிக்கவில்லை என்றும் குறைந்தபட்ச அடிப்படை விலை குறித்த உறுதிமொழியை சட்டமாக்க முயற்சிக்கவில்லை என்றும் விவசாயிகள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து 39வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.