இந்தியா உக்ரைன் மக்களின் மரணத்தை வாங்குகிறது : உக்ரைன் அமைச்சர் குற்றச்சாட்டு

United Russia Ukraine
By Irumporai Dec 07, 2022 10:46 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலாமாக உக்ரைனின் மரணத்தையும் இந்தியா வாங்குவதாக உக்ரைன் விமர்சித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

 உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களை கடந்து போர்தொடுத்து வருகின்றது, ரஷ்ய படைகளும் உக்ரைன் படைகளும் பொதுமக்களும் இந்த போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் சரவதேச அளவில் நிதிபற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது, உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ளதால் , உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியா நடுநிலைதன்மையினை கடைபிடித்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்ய இந்திய உறவு குறித்து வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா. உக்ரைன் இந்தியாவில் இருந்து நடைமுறை ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா உக்ரைன் மக்களின் மரணத்தை வாங்குகிறது : உக்ரைன் அமைச்சர் குற்றச்சாட்டு | India Buying Ukrainian Foreign Minister

மேலும் இந்த பிரச்சினைக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை உக்ரைன் சுட்டிகாட்டியுள்ளது. உக்ரைன் மிக மோசமான நிலையில் ரஷ்யாவினை எதிர்த்து போராடி வருகின்றது. ஆனால் இந்தியாவோ தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்துக் கொண்டுள்ளது.

உக்ரைனின் இறப்பு

இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவது, உக்ரைன் மக்களின் ரத்தத்தினை தள்ளுபடியில் வாங்குகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா வாங்கும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்-லும் உக்ரைன் மக்களின் இறப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவுக்கு நட்புறவுடனும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதை ஆதரித்தோம்.

ஆதரவு கேட்கும் உக்ரைன்

ஆக இந்தியாவிடம் இருந்து நாங்கள் நடைமுறை ஆதரவினை எதிர்பார்க்கிறோம் என்று கூறியவர், உக்ரைனியர்கள் தினமும் செத்துக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் துன்பப்படுவதால், இந்தியாவுக்கு குறைந்த விலையில் ரஷ்யா எண்ணை வழங்கி வருகிறது என்றவர், ஐரோப்பிய யூனியன் எங்களை விட அதிக விலைக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்கிறது என சொல்வதை விடுத்து.

மனிதாபிமான கண்ணாடியின் வழியே இந்தியா இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும். இந்திய தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றி, உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலை போர் என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.