மத்திய பட்ஜெட் 2024 -2025; வெள்ள பாதிப்புக்கு நிதி - தமிழ்நாட்டை தவிர்த்த நிதியமைச்சர்!

Smt Nirmala Sitharaman India Budget 2024
By Swetha Jul 23, 2024 06:57 AM GMT
Report

 2024 -2025 ஆம் ஆண்டுகான மத்திய பட்ஜெட் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்

நடப்பாண்டில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி தனது பதவியை தக்கவைத்துக்கொண்டார்.

மத்திய பட்ஜெட் 2024 -2025; வெள்ள பாதிப்புக்கு நிதி - தமிழ்நாட்டை தவிர்த்த நிதியமைச்சர்! | India Budget 2024 25 Important Schemes Update

இதனிடையே 2024-25ம் நிதியாண்டிற்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

2024 -2025

ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம்

500 முன்னணி நிறுவனங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்படும். இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை மற்றும் கூடுதலாக ரூ.6,000 நிதியுதவியும் வழங்கும்.


மின் ஆலை மற்றும் வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ.32,900 கோடி

பீகார் மாநிலத்தில் மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.  


நகர்புறங்களில் வீடு - 1 கோடி பேருக்கு நிதி

நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும் இதற்காக ரூ.2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 


வெள்ள பாதிப்பு - தமிழ்நாட்டை தவிர்த்த நிதியமைச்சர்

அஸ்ஸாம், இமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உதவும் என பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை.


உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன்

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு, இதற்காக மாநில அரசுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு. 


இனி.. மொபைல் போன் விலை குறைய வாய்ப்பு

மொபைல் போன், சார்ஜர் மற்றும் உதிரிபாகங்கள் மீதான சுங்கவரி 15% ஆக குறைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இதன் மூலம் மொபைல் போன்களின் விலைகள் குறைய வாய்ப்பு.


பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டம்

பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு மாதம் 300 யூனிட்கள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் பயனடையும்.


தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆக குறைப்பு

25 முக்கியமான கனிமங்களான லித்தியம், தாமிரம், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆக குறைப்பு, பிளாட்டினத்தின் மீதான சுங்க வரி 6.4% ஆக குறைப்பதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு.


வருமான வரியை தாமதாக தாக்கல் செய்தால்.. இனி குற்றமல்ல..

கடந்த நிதி ஆண்டில் மூன்றில் ஒரு பங்கினர் புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்துள்ளனர் . எனவே வருமான வரி இனி தாமதமாக தாக்கல் செய்வது இனி குற்றமாக கருதப்படாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.


1.24 மணிநேரம் பட்ஜெட் உரையை வாசித்தார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.24 மணிநேரம் பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார்.