ஒரே ஒரு மேட்ச்.. பாகிஸ்தானி சாதனையை நொறுக்கிய இந்தியா - புதிய உலக சாதனை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முந்தைய சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
இந்திய அணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. அதுவும் இரண்டு சூப்பர் ஓவர்களுடன் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
புதிய சாதனை
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை ஒயிட் வாஷ் செய்வது இந்திய அணிக்கு இது 9-வது முறையாகும்.
இதன் மூலம் அதிக தொடர்களை ஒய்ட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை, இந்திய அணி முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் அணி 8 டி20 தொடர்களில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்திருந்தது.