பறவை காய்ச்சல் மனிதர்களையும் தாக்கலாம்! சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

newvirus
By Luxshan Jan 05, 2021 09:01 PM GMT
Report

கொரோனா தொற்று பரவல் தற்போது தான் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்து கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 'கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளதால் அது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.