ராஜஸ்தானில் காகங்கள் மூலம் உருவாகும் மிகவும் ஆபத்தான வைரஸ்

india-brition-corona-new-virush
By Jon Jan 04, 2021 11:13 AM GMT
Report

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு வரவே பல கட்ட போராட்டமாக மக்களின் வாழ்கை சென்று கொண்டிருக்கிறது.

தற்போது இந்த பாதிப்பு ஓய்வதற்குள் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய வகை பிரச்சனைக் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த காகங்களில் அபாயகரமான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காகங்கள் மட்டுமல்லாமல் மேலும் சில பறவைகளும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெய்ப்பூர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பிரச்சனை எங்கு சென்று முடியப்போகிறதோ என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.