கொரோனாதடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்து: சசிதரூர் கவலை

india-brition-corona-new-virush
By Jon Jan 04, 2021 01:57 AM GMT
Report

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் இன்னும் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது ஆபத்தானது என, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக்கின் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கோவிஷீல்ட் ஆகிய தடுப்பு மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தால். அதை விநியோகிக்க தயாராக இருப்பதாக கேரள அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் சசி தரூர் தனது ட்வீட்டர் பதிவில் கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனை செய்யவில்லை, ஆனால்அதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது ஆபத்தானதுஎன தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  


கோவாக்சின் குறித்து , சசிதரூரின் விமர்சனம் பற்றி கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜா, கூறும் போது, தடுப்பூசிகள் குறித்து மாநில அரசு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பைப் வெளியிடவில்லை என்றும், கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என அவர் கூறினார்.