நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு
india-brition-corona-new-virush
By Jon
கொரோனா தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கான பரிசோதனைகள் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுமா இல்லை கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது பற்றி குழப்பங்கள் நிலவி வந்தது.
தற்போது இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.