திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் பேசியது என்ன? காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படம்

M K Stalin Sonia Gandhi
By Fathima Nov 29, 2026 12:46 PM GMT
Report

Congress Leaders Talk With MK Stalin About Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என இண்டியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக நேற்று திமுக அறிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்தனர்.

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் பேசியது என்ன? காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படம் | India Bloc Meeting With Mk Stalin Congresss

இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, 'காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தோம் எனப் பதிவிட்டுள்ளது.