இந்த பெல்ட் 35 ஆயிரம் ரூபாயா? அப்படி என்ன பெல்ட் இது?
தன் மகள் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பெல்ட்டை பார்த்து தாய் செய்த விமர்சனம் இணையத்தி;ல் வைரலாகி வருகிறது.
Gucci மிகவும் விலையுயர்ந்த பேஷன் நிறுவனம். இந்நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் எல்லாம் மிகவும் அதிகமாக விலையில் இருக்கும்.
இந்நிலையில் இந்த பிராண்டின் பெல்ட் ஒன்றை இந்திய மகள் ஒருவர் 35 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளார்.
அந்த பெல்டை கையில் வாங்கி பார்த்த அவரது தாய், இது பள்ளி குழந்தைகள் போட்டு செல்லும் பெல்ட் போல இருப்பதாகவும், இது போய் 35 ஆயிரம் ரூபாயா என கிண்டல் செய்துள்ளார்.
மேலும், அப்படி என்ன இந்த பெல்டில் இருக்கிறது என கேட்டுவிட்டு இதே பெல்டை 150 ருபாய்க்கும் வாங்கலாம் எனவும் விமர்சித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.