வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால்,
வெறும் 176 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 28 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தீபக் ஹூடா 26 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.