2-வது ஒருநாள் போட்டி : இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

Sri Lanka Cricket Indian Cricket Team
By Nandhini Jan 13, 2023 06:43 AM GMT
Report

2-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

கவுகாத்தியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இப்போட்டியில் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 43.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.   

india-beat-sri-lanka-to-win