3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது இந்தியா

Rohit Sharma Indian Cricket Team New Zealand Cricket Team Shubman Gill
By Thahir Jan 25, 2023 01:57 AM GMT
Report

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

சதம் அடித்த இந்திய வீரர்கள் 

இப்போட்டி நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்துாரில் நேற்று நடந்து. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை 4 பக்கமும் அடித்து விளாசி விளையாடினர்.

India beat New Zealand to become champions

பின்னர் ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்கள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை குவித்தது.

நியூசிலாந்து அணி படுதோல்வி 

பின்னர் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான பின் ஆலன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

India beat New Zealand to become champions

பின் களம் இறங்கிய ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்களும் டேரியல் மிட்செல் 24 ரன்களும் பிரேஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்டிங் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் நிலைத்து நின்று ஆடிய டீவன் கான்வே 100 பந்துகளில் 138 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 41.2 ஓவரில் 295 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது. இதையடுத்து இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

India beat New Zealand to become champions

இதன் மூலம் ஒரு நாள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.