இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது!

Rohit Sharma Indian Cricket Team England Cricket Team
By Thahir Oct 29, 2023 05:18 PM GMT
Report

இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி

உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே சுப்மன் கில் 9 ரன்னில் விக்கெட்டைஇழந்தார். அடுத்து வந்த கோலி ஒன்பது பந்து விளையாடி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ரோஹித் சர்மா அதிரடி

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 40 ரன்னிற்கு மூன்று விக்கெட்டை இழந்து இருந்தது.

பின்னர் ரோஹித் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்க மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா 101 பந்திற்கு 87 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது! | India Beat England To Enter The Semi Finals

சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் விக்கெட் இழந்தார். இருப்பினும் அடுத்து வந்த ஜடேஜா எட்டு ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தன.

திணறிய இங்கிலாந்து 

இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்டையும், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 230 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தன. இருப்பினும் டேவிட் மலான் பும்ரா வீசிய பந்தில் போல்டாகி 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோ ரூட் களமிறங்க முதல் பந்திலே டக் அவுட் வெளியேறினார்.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது! | India Beat England To Enter The Semi Finals

இதைத்தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்க 10 பந்திற்கு ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் கேப்டன் ஜோஸ் பட்லர் களமிறங்கினார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 14 ரன்னில் ஷமி வீசிய பந்தில் போல்ட் ஆகினார்.

இதனால் இங்கிலாந்து அணி 39 ரன்னிற்கு 4 விக்கெட்டை இழந்த நிலையில் மத்தியில் களம் இறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயின் அலி 15 , லியாம் லிவிங்ஸ்டோன் 27, கிறிஸ் வோக்ஸ் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி அபார வெற்றி 

இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டையும், பும்ரா 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகள் உடன் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது! | India Beat England To Enter The Semi Finals

இங்கிலாந்து அணி ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டு புள்ளியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.