ஜூனியர் உலககோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா - அசத்திய இளம் வீர்கள்

INDvAUS u19worldcupfinal2022
By Petchi Avudaiappan Feb 02, 2022 09:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஜூனியர் உலக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிகுள் நுழைந்து அசத்தியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்கு உட்பட்ட 14வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.இதில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியில்  கேப்டன் யாஷ் துல் 110 ரன்களும், ஷேக் ரஷித் 94 ரன்களும் விளாச 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்த்து. 

தொடர்ந்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் கண்டது. அந்த அணியில்  லச்லான் ஷா 51, கேம்பேல் 30 , மில்லர் 38 ரன்கள் எடுக்க அந்த அணி  41.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.