2வது டெஸ்ட் போட்டி - டெல்லியில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன..!

Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini Feb 15, 2023 06:57 AM GMT
Report

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா அணியின் 2வது டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

இந்நிலையில் 40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தின் அனைத்து டிக்கெட்களும் தற்போது விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

india-australia-day-2nd-test-cricket