முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் - இந்தியா - ஆஸ்திரேலியா கடும் மோதல்..!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
இதற்கான முதல் போட்டி இன்று முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
2வது நாள் ஆட்டம் - இந்தியா - ஆஸ்திரேலியா கடும் மோதல்
நேற்று இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்தவுடனேயே வெளியேறினார்கள். இப்போட்டியில், லபுஷேன் சிறப்பாக விளையாடினார்.
இவர் 49 ரன்களும் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்கள். இதனையடுத்து, 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் வீசினார். நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தற்போது நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.