நடராஜனை பேட்டி எடுத்த அஸ்வின்: ஆஸ்திரேலிய மைதானத்தில் தமிழில் பேசிய கலக்கல் வீடியோ

sundar nattu ground
By Kanagasooriyam Jan 18, 2021 05:43 PM GMT
Report

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரு அணிகளும் சமநிலையில் இருப்பதால் தொடரை வெல்லும் நோக்குடன் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

அவர்கள் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அஸ்வின் அங்கு வந்த அவர்களை பேட்டியெடுத்தார். அப்போது நடராஜனிடம், நெட் பவுலராக இருந்த நீங்கள் நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளீர்கள்.

அந்த அனுபவம் எப்படி உள்ளது? என நடராஜனிடம் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த நடராஜன், ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை.

நெட் பவுலராக இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்று தான் நினைத்தேன். வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப. ரொம்ப சந்தோஷமா இருக்கு என தெரிவித்துள்ளார்.