ட்விட்டர் நிறுவனத்தை எச்சரித்த மத்திய அரசு.. பணிந்த ட்விட்டர் - நடந்தது என்ன?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக தாக்கி வருகிறது.
பல்வேறு ஊர்களில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் வேண்டும் என்கிற கோரிக்கைகள் ட்விட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தன.
அவசர கால உதவிகளைப் பெறுவதில் ட்விட்டர் மிகப்பெரிய பங்காற்றியது. அதே சமயம் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
இந்தியா கொரோனா இரண்டாம் அலைக்கு தயாராக இருக்கவில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே காரணம் எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச கவனமும் பெறத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு கொரோனாவை கையாண்டதை விமர்சிக்கும் விதத்தில் உள்ள ட்விட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் என மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்டு 52 ட்விட்டர் பதிவுகளை தணிக்கை செய்துள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.