போலி என்கவுண்டரில் ஈடுபட்டதாக 3 ராணுவ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை

india army encounter
By Jon Dec 28, 2020 12:36 PM GMT
Report

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு கா‌‌ஷ்மீரில் கடந்த ஜூலை மாதம், ஷோபியன் என்ற இடத்தில், 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் போலியாக என்கவுண்ட்டர் நடத்தி இந்த படுகொலையை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ரா‌‌ஷ்டீரிய ரைபிள் ராணுவ படைப்பிரிவை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் மற்றும் காவலர்கள் பிலால் அஹ்மத் மற்றும் தபீ‌‌ஷ் அகமது ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகள் 18-ந் தேதி நிறைவு பெற்றது. முடிவில் ஆயுதப்படையினர் தங்களது அதிகாரங்களை மீறி செயல்பட்டது தெளிவானது.

இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் உள்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.