அடப்பாவமே:இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட்

india ENGvIND WTC23
By Irumporai Aug 25, 2021 02:19 PM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று(25ம் தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை, இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசினார். ஐந்தாவது பந்தில், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர் டக் அவுட் ஆனார்., அடுத்து புஜாரா வந்தார். அவர் நிலைத்து நிற்பதற்குள், ஆண்டர்சன் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில், கே.எல்.ராகுல் போலவே, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

இதையடுத்து கேப்டன் விராத் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். விராத் விக்கெட்டையும் ஆண்டர்சன் சொல்லி வைத்தமாதிரியே தூக்கினார். அவரும் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், 40.4 ஓவர்களில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது