''இந்திய அணியோடு விளையாடுவது, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது போன்றது'' : நியூசிலாந்து வீரர் கருத்து
உலகின் பலம் வாய்ந்த அணியான இந்திய அணியுடன் மோதியது மிகவும் சவாலான விஷயம் என்று நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
2021 உலக கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது,
பின் மீண்டும் கம்பேக் கொடுத்த இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி இந்திய அணி குறித்தான தனது கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் இந்திய நாட்டில் இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளோம் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் எந்த ஒரு எதிரணியாலும் யாரும் அசைக்க முடியாத அளவுக்கு ஒரு மிகச்சிறந்த அணியாகும்,
மத்த நாடுகளில் விளையாடும் பொழுது அந்த மைதானத்திற்கு ஏற்ப எளிதாக எங்களால் ஒத்துப்போக முடியும், ஆனால் கடினமான இந்திய மைதானங்களில் உலகின் தலைசிறந்த இந்திய அணியை எதிர்கொள்வது என்பது சவாலான விஷயமாகும்.
இதுவரை விளையாடியது எல்லாம் மறந்துவிட்டு இந்திய அணிக்கு எதிராக விளையாடும் இந்த போட்டியை எங்களது அணி வீரர்கள் முதல் போட்டியாக நினைத்து விளையாடுவார்கள் .
இது எங்களது அணி அடுத்த 2 வருடங்களுக்கு நடைபெற உள்ள புதிய சுழற்சி முறையின் முதல் போட்டியாகும் என்றும் டிம் சவுதி தெரிவித்திருந்தார்
.
கடைசியாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதியது இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது, குறிப்பிடத்தக்கது

இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்க ராசியும் இருக்கா பாருங்க Manithan

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
