இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருந்த போட்டி ரத்து...இது தான் காரணம்..!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியா அணி மோதும் போட்டி ரத்து
பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் எதிர்கொண்டு வருகிறது.
கடந்த திங்கட்கிழமை நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட இருந்தது.
இன்று காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து மழை பொழிவு தொடர்ந்தால் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் நடுவர் குழு போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
Match at The Gabba has been called off due to persistent rains. pic.twitter.com/pWSOSNBWz1
— BCCI (@BCCI) October 19, 2022