இந்தியாவும்,ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் - பிரதமர் நரேந்திர மோடி

Narendra Modi
By Thahir May 23, 2022 08:55 PM GMT
Report

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான மிக முக்கிய பங்கு வகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

\இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,சிகாகோவில் சரித்திர புகழ் பெற்ற தனது உரையை துவங்குவதற்கு முன்பாக“ சுவாமி விவேகானந்தர் ஜப்பான் நாட்டிற்கு வந்திருந்தார் என்றும், இது அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.

வன்முறை மற்றும் தீவிரவாதத்தில் இருந்து மனித குலத்தை காக்க புத்தர் காட்டிய பாதையை உலகம் பின்பற்ற ஷ வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர்,பருவ நிலை மாற்றம் தற்போது சவாலாக இருப்பதாகவும்,இந்தியா அதற்கான தீர்வுகளை எதிர்நோக்கி இருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

மும்பை,அகமதாபாத் அதிவிரைவு ரயில் திட்டம் டெல்லி,மும்பை தொழில் வழிதடம் போன்றவை இந்திய ஜப்பான் ஒத்துழைப்பிற்கு மாபெரும் உதாரணம் என்றார்.

இந்தியாவும்,ஜப்பானுவும் இயற்கையான கூட்டாளிகள் என்ற அவர் இந்தியாவின் வளர்ச்சி பணிகளில் ஜப்பான் முக்கிய பங்கு வகிறது என்றார்.