இந்தியா தான் இனி எங்களுக்கு எல்லாம்.. பகிரங்கமாக அறிவித்த ரஷ்யா!

China India Russian Federation
By Sumathi Apr 02, 2023 09:28 AM GMT
Report

இந்தியா, சீனாவை முக்கிய கூட்டி நாடுகளாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தியா-சீனா

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து ரஷ்யாவுக்கு அனைத்து பிரிவிலும் குறிப்பாக ரஷ்யா அரசின் கஜானாவை பாதுகாக்கும் முக்கிய வர்த்தகமாக கச்சா எண்ணெய்-ஐ இந்தியா தொடர்ந்து அதிகமாக வாங்கி வருகிறது.

இந்தியா தான் இனி எங்களுக்கு எல்லாம்.. பகிரங்கமாக அறிவித்த ரஷ்யா! | India And China Are Allies Countries Says Russia

இந்த நிலையில் தான் ரஷ்ய அரசின் புதுப்பிக்கப்பட்ட 42 பக்க தேசிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கத்திய ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.

ரஷ்யா அறிவிப்பு

சீனாவும், இந்தியாவும் வருங்காலத்தின் முக்கிய கூட்டணி நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சிவில், அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் ஆகிய உறவுகளில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு ஒத்துழைப்பை தந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைன் போருக்கு பின்னர் இந்தியாவும் சீனாவும் ராணுவ ரீதியாகவும் அரசு ரீதியிலும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.