அமெரிக்க தேர்தல் - மீண்டும் வெற்றி வாகை சூடிய தமிழர்

Tamils United States of America US election 2024
By Karthikraja Nov 06, 2024 08:30 AM GMT
Report

அமெரிக்க தேர்தலில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் நேற்று(05.11.2024) அதிபர் தேர்தல் முடிந்து நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

trumph kamala harris

தற்போதைய நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 247 எலெக்ட்ரோல் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். கமலா ஹாரிஸ் 217 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றி பெற 270 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் இல்லினாய்ஸின் 8வது காங்கிரஸின் மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி 56.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

raja krishnamoorthi

ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டில் உள்ள இராஜபாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரின் குழந்தை பருவத்திலே இவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.

இவர் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜா கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸின் கமிட்டிக்கு தலைமை தாங்கிய முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.