இந்தியா மட்டும் அல்ல, லண்டனில் தயாராகிறது அம்பானியின் 2-வது பிரமாண்ட வீடு

india-ambani-house
By Nandhini Nov 06, 2021 04:09 AM GMT
Report

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, 2-வதாக தன் குடும்பத்தினருக்காக ஒரு வீட்டை தயார் செய்து வருகின்றார்.

ஆனால், அந்த வீடு இந்தியாவில் இல்லை, லண்டனில் உள்ளது. லண்டன் பக்கிங்காம்ஷயரில் இருக்கும், 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'ஸ்டோக் பார்க்' வீட்டை தயார் செய்து வருவதாக, 'மிட் டே' பத்திரிகை தகவல் தெரிவித்திருக்கிறது.

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, மும்பையில் மிகப்பெரும் பணக்காரர்கள் வசிக்கும் 'அல்டாமவுன்ட்' சாலையில், 'அன்டிலியா' எனும் பெயரில் மிகப்பெரிய வீடு இருக்கிறது. கொரோனாவை முன்னிட்டு, அம்பானி குடும்பத்தினர் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை இந்த வீட்டிலேயே செலவிட்டு வருகிறார்கள்.

இதற்கு மாறுதலுக்காக, 2-வதாக ஒரு வீட்டை தயார் செய்ய முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதனையடுத்து, லண்டனில் உள்ள வீடு தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வீட்டை, இவ்வாண்டின் துவக்கத்தில் தான், 592 கோடி ரூபாய்க்கு அம்பானி வாங்கியுள்ளார். இந்த வீட்டில் மொத்தம் 49 படுக்கை அறைகள் இருக்கின்றன. சிறப்பான மருத்துவ வசதிகளும் இந்த ஆடம்பர வீட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

இந்தியா மட்டும் அல்ல, லண்டனில் தயாராகிறது அம்பானியின் 2-வது பிரமாண்ட வீடு | India Ambani House