நாட்டிற்கு ஆன்மீக அறிவியல் தேவை : இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் நேற்று மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தார்.
இஸ்ரோ சிவன்
அங்குஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவன் : விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.
அறிவியலும் வேண்டும் ஆன்மிகமும் வேண்டும்
விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக மாறும். தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.
மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.
அறிவியலும், ஆன்மிகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மிக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.