‘191 ரன்களுக்கு சுருண்டது இந்தியா’ - சிக்கலில் இந்திய பவுலர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் உள்ளன.
இதனிடையே 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதிகப்பட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும்,கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஆலி ராபின்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இவர்களை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தும் பணி இந்திய பவுலர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.