இன்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.., திமுக புறக்கணிப்பு
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா ஜன்பந்தன் என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சில கட்சிகள் தங்களது சொந்த காரணங்களால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
23 political parties have confirmed participation in the INDIA janbandhan meeting at Constitution Club, New Delhi on Monday June 8, 2026, at 12 noon. There are some parties who have expressed their inability to attend this particular meeting for their own reasons - even though…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 7, 2026
மேலும், இந்தியா கூட்டணி அதன் பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோடி அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளை இந்த கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவு காரணமாக திமுக இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
காங்கிரசை குற்றம் சாட்டி திமுக விலகி இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக விலகி உள்ளது.