ராகுல், ஜடேஜா அதிரடி... முதல் இன்னிங்ஸில் ரன்களை குவித்த இந்திய அணி...
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் எஞ்சிய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் குவித்தார். இதேபோல் அதிரடி ஆட்டக்காரர் ஜடேஜாவும் தன் பங்கிற்கு 56 ரன்கள் விளாச இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஒலி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
