கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்யா , புறக்கணித்த இந்தியா , ரஷ்யாவுக்கு செக் வைத்த ஐ.நா

russia suspendedun ukraineissue
By Irumporai Apr 08, 2022 05:08 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைனில் அப்பாவி பொதுமக்களை கொன்ற குற்றச்சாட்டுக்காக ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்து ஐநா பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, அங்கு கடும் தாக்குதலை நடத்தி வருகிறது அதோடு முதலில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமட்டேன் என கூறிய ரஷ்யா அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்தது.

இந்த நிலையில் ரஷ்யாவினை ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஐநா பொதுச்சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்யா , புறக்கணித்த இந்தியா , ரஷ்யாவுக்கு செக் வைத்த ஐ.நா | India Abstention At The Un Says Us Congressman

ஐநா பொதுச்சபையில் மொத்தமுள்ள 197 நாடுகளில் 93 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 24 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட 58 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன.

மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன், போர்குற்றவாளிகள் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.