இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் : வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

By Irumporai Oct 07, 2022 03:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஐநாவில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம்

ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது 

மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் 20 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் : வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா | India Abstains As Un Human Rights Srilanaka

புறக்கணித்த இந்தியா

தீர்மானத்திற்கு எதிராக விழுந்த வாக்குகளை விட ஆதரவாக விழுந்த வாக்குகள் அதிகம் என்பதால் இந்தத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

20 நாடுகள் புறக்கணிப்பு

இந்தியா மட்டுமின்றி ஜப்பான், நேபாளம், கத்தார் உள்ளிட்ட 20 நாடுகள் இதைப் புறக்கணித்த நிலையில், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்து இருந்தது.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்த ஐநாவுக்கான இந்தியத் தூதர் இந்திராமணி பாண்டே, நிலைமையை மேம்படுத்த இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்