தனது வாழ்க்கையை இந்தியாவுக்காக அர்ப்பணித்தவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – பிரதமர் புகழாரம்!

india-abdhulkalam-modi
By Nandhini Oct 15, 2021 04:13 AM GMT
Report

இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம் என்று இந்திய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் 11வது குடியரசு தலைவரும், பாரத ரத்னா நாயகனுமாகிய அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இதனையடுத்து அவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்த நாளிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, அப்துல் கலாமின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் அன்று அவருக்கு எனது அஞ்சலி. இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் எப்பொழுதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.