''நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல '' - கொந்தளித்த ராகுல் காந்தி

india rahulgandhi hindutvadis
By Irumporai Dec 12, 2021 11:53 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல என கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி இந்து, இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையேயான போட்டிதான் தற்போதைய அரசியல்.

இந்த இரண்டு வார்த்தைகளும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டது என கூறிய ராகுல் நான் இந்து, ஆனால் இந்துத்துவவாதி கிடையாது. மகாத்மா காந்தி இந்து, ஆனால் கோட்சே இந்துத்துவவாதி எனக் கூறினார்.

மேலும், இந்தியா இந்துக்களின் நாடு. இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர்.

ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திக்கிறார்கள். அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை.

அதை பெறுவதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். அனைத்து மதங்களையும் மதித்து, யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லாதவரே இந்து. இந்துத்துவவாதிகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, இந்துக்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.