இந்தியாவில் நாளொன்றுக்கு 80 கொலைகள், 77 பாலியல் வன்புணர்வுகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

murder crime NCRBReport
By Irumporai Sep 16, 2021 11:59 AM GMT
Report

இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 80 கொலைகளும், 77 பாலியல் வன்புணர்வுகளும் நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இந்தியாவில் கடந்த 2020ல் சராசரியாக நாளொன்றுக்கு 80 கொலைகளும், 77 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

மேலும், கடந்த 2019ஐ விட 2020ல் கொலை குற்ற எண்ணிக்கைகள் 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2019ல் 28,915 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே 2020ல் 29,193 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்ற சம்பவங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது உத்தரப் பிரதேசத்தில் 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக 3,779 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

பிஹாரில் 3,150 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 2,163 வழக்குகளும், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2,101 மற்றும் 1,948 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில் கடந்த 2020ல் 472 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வன்புணர்வு குற்றங்களை பொறுத்த அளவில், 28,046 வழக்குகள் கடந்த 2020ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக நாளொன்றுக்கு 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களாக ஒட்டுமொத்தமாக 3,71,503 வழக்குகள் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ல் இந்த எண்ணிக்கை 4,05,326 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.