இந்தியாவில் 76 பேருக்கு புதிய வகை கொரோனா : அச்சத்தில் பொதுமக்கள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,915 ஆகஉள்ளது
புதிய கொரோனா
இந்த நிலையில், புதிய வகை கொரோனாவான XBB 1.16, நம் நாட்டில் 76 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்று இந்தியாவில் கொரோனா பரவும் மரபணு வரிசைமுறை மற்றும் வைரஸ் மாறுபாட்டை ஆய்வு செய்து வரும் INSACOG தெரிவித்துள்ளது.
அச்சத்தில் பொதுமக்கள்
அதன்படி, கர்நாடகத்தில் 30, மகாராஷ்டிராவில் 29, புதுச்சேரியில் 7, டெல்லியில் 5, தெலுங்கானாவில் 2, குஜராத் 1, இமாசலபிரதேசம் 1, ஒடிசாவில் 1 என இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான், XBB 1.16 மாறுபாடு கண்டறியப்பட்டது. பிப்ரவரியில் மொத்தம் 59 ஆக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் மட்டும், 15 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.