74-வது குடியரசு தின விழா - வரலாற்றில் முதல்முறையாக BSF ஒட்டகக் குழு அணிவகுப்பு - வைரல் வீடியோ...!

India's Republic Day Viral Video India
By Nandhini Jan 26, 2023 07:25 AM GMT
Report

74-வது குடியரசு தின விழாவில், வரலாற்றில் முதல்முறையாக BSF ஒட்டகக் குழு அணிவகுப்பு நடைபெற்றது.

டெல்லி குடியரசு தின விழா

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம்பெற்றன. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் கலந்து கொண்டார்கள்.

முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில், குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை தொடங்கியுள்ளன. டெல்லி குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது.

india-74th-republic-day-bsf-camel-first-in-history

முதல்முறையாக BSF ஒட்டகக் குழு அணிவகுப்பு

இந்திய 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வரலாற்றில் முதல் முறையாக மகிளா பிரஹாரிகள் அடங்கிய BSF ஒட்டகக் குழு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் வந்த ஓட்டகங்கள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ -