இந்தியா மீது 500% வரி விதிப்பு - மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!

Donald Trump India
By Sumathi Jan 09, 2026 11:37 AM GMT
Report

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

500 சதவீதம் வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 25 சதவிகித அபராத வரியும் விதித்துள்ளார். இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும்

இந்தியா மீது 500% வரி விதிப்பு - மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்! | India 500 Tax Buys Russian Oil Trump Approves Bill

இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை செனட்டர்கள் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் ப்ளூமெண்டல் இணைந்து கொண்டு வந்துள்ளனர்.

டிரம்ப் ஒப்புதல்

இந்த மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பிலிருந்தும் 80-க்கும் மேற்பட்ட செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த வாரமே வாக்கெடுப்புக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மசோதா சட்டமானால், திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் உள்ள ஜவுளித் தொழில்கள் நிலைகுலையும்.

இந்தியர்களுக்கான விசா சேவையை நிறுத்திய நாடு - மோசமாகும் நிலை!

இந்தியர்களுக்கான விசா சேவையை நிறுத்திய நாடு - மோசமாகும் நிலை!

அமெரிக்கா, இந்திய ஜவுளிகளை வாங்குவதை நிறுத்திவிட்டு, வியட்நாம் அல்லது வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு மாறிவிடும். பொருட்களுக்கு மட்டுமல்லாமல் 'சேவைகளுக்கும்' இந்த வரி பொருந்தும் என்பதால், இந்திய ஐடி நிறுவனங்களின் லாபம் குறையும்.

அமெரிக்காவின் வரி மிரட்டலால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீண்டும் சவுதி அரேபியா அல்லது ஈராக் போன்ற நாடுகளிடம் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.