ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 27 பதக்கங்களை வென்று 3-வது இடத்தில் இந்தியா!

India
By Jiyath Jul 17, 2023 02:13 AM GMT
Report

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்

24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கல் நடைபெற்றது. இந்த போட்டி கடந்த ஜூலை 12-ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 27 பதக்கங்களை வென்று 3-வது இடத்தில் இந்தியா! | India 3Rd With 27 Medals Thailand Ibc 09

இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய வீரன் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்து தமிழக வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கத்தை வென்றார்.

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பதக்கம் வெல்வது என்பது இதுவே முதன்முறையாகும்.

இந்தியா 3 ஆவது இடம்

இந்த தொடரில் 6 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 6 தங்கம், 12 வெள்ளி, 9, வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 3 ஆவது இடத்தை பிடித்ததுள்ளது. இந்த தொடரில் முதல் இடத்தை ஜப்பானும், இரண்டாம் இடத்தை சீனாவும் பிடித்துள்ளது.