மக்களே கவனம்: 19 குழந்தைகள் பலி - இந்திய இருமல் மருந்துக்கு தடை!
இந்தியாவில் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த தடை செய்ய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இருமல் மருந்து
உத்தரப் பிரதேசம், நொய்டாவில் டாக்-1 மேக்ஸ், ஆம்ப்ரோனால் ஆகிய இரு மருந்துகளை மரியான் பயோடெக் எனும் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்து உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தானில் இந்த இருமல் மருந்துகளை குடித்த 19 குழந்தைகளின் உடல்நிலை மோசமானது.

பரிசோதனையில், Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. அதாவது மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைக்காரர்களிடம் கேட்டு அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தடை
இதனால், 19 குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, டாக் 1 மேக்ஸ் சிரப்கள், மாத்திரைகள் அந்த நாட்டின் அனைத்து மருந்து கடைகளிலிருந்தும் திரும்ப பெறப்பட்டது. மேலும், ஆம்ப்ரோனால் மற்றும் டாக் 1 மேக்ஸ் சிரப்பை பயன்படுத்த வேண்டாம் என உஸ்பெகிஸ்தானு்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்த சிரப்புகளில் டைஎத்திலின் கிளைகால் அல்லது எத்திலீனின் அளவுக்கு அதிக அளவு இருப்பதாக பரிசோதனை கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, பயோடெக் நிறுவனத்தின் அங்கீகாரத்தை உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ரத்து செய்துள்ளது.