உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லாது - நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு!
உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை10% இடஒதுக்கீடு செல்லாது என்று நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு
கடந்த 2019ம் ஆண்டில் தமிழக அரசால் உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது.
தமிழக அரசு முடிவுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட 30 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசியமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 10% இடஒதுக்கீட்டை உயர்சாதியினருக்கு 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் விசாரணை
இந்நிலையில், இன்று இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது. தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்தர பட், பேலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணையில் வாதங்களை முன் வைத்தது. உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்வு வசித்தனர்.
10% சதவீத இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி ஆதரவு தெரிவித்தார்.

10% இடஒதுக்கீடு செல்லாது - நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு
இதனையடுத்து, 10% சதவீத இடஒதுக்கீடு வழக்கில் 4 தீர்ப்புகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கூறுகையில், பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதை அனுமதிக்கலாம். ஆனால், SC, ST, OBC உள்ளிட்ட பிரிவினர் பலன்களை அனுபவித்தார்கள் என்ற காரணத்திற்காக 10% ஒதுக்கப்படுவது ஏற்க முடியாது.
10% இடஒதுக்கீடு சட்டவிரோதமானது. சாதி பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதிகளில் உள்ள ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவ கோட்பாடுக்கு எதிரானது என்றார்.