டவ்தே புயல் இன்று மாலை குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கிறது - வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
டவ்தே புயல் இன்று மாலை குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த டவ்தே புயல் இன்று (17.05.2021) காலை 05.30 மணியளவில் உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
தற்போது டையூவிலிருந்து 160 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல் பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது, மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையைக் கடக்க உள்ளது.
இன்றும், நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தென் தமிழக கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) வருகிற 18ம் தேதி கடல் அலை 2.0 முதல் 2.3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil