மூத்த பத்திரிகையாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் : பிரதமர் மோடி இரங்கல்

india Message of condolence
By Nandhini Apr 30, 2021 11:26 AM GMT
Report

வட இந்தியாவில் ஆஜ் தக் மற்றும் ஜீ நியூசிஸ் ஆகிய ஊடகங்கள் மிகவும் பிலபமானவை. இந்த ஊடகத்தில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறமையுடன் ரோகித் சர்தானா பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து, ஜீ நியூஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கொடிய வைரஸ் என் வாழ்கையில் மிகவும் நெருக்கமாக இருந்தவரின் உயிரைப் பறிக்கும் என்று" என பதிவிட்டுள்ளார். 

ரோகித் சர்தானாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.