ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள் தான் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்போம் – மத்திய அரசு

india
By Nandhini Apr 27, 2021 08:24 AM GMT
Report

நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக் கோரி வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் தமிழக அரசு இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக அனுமதி வழங்குவதாகவும், ஆக்சிஜன் தவிர வேறு ஏதுவும் உற்பத்திச் செய்யக்கூடாது என்று பத்திரத்தில் தெரிவித்திருந்தது.

இன்று வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆக்சிஜனை வழங்குவதில் எங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

இதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். உற்பத்திச் செய்யும் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள் தான் மாநிலங்களுக்குப் பிரித்து கொடுப்போம் என்றும், மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாட்டை பொறுத்து ஆக்சிஜனைப் பிரித்துக் கொடுப்போம் என்றும் வாதாடினார்.

இதை ஆமோதித்த நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு விநியோகிப்பதைத் தடுக்கக்கூடாது. உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்குவதே முறையானது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அனுமதி தந்த 10 நாளில் ஆக்சிஜன் உற்பத்தியை ஆரம்பித்து விடுவோம் என வேதாந்தா நிறுவனம் உறுதியளித்துள்ளது.  

ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள் தான் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்போம் – மத்திய அரசு | India