இந்தியாவின் தற்போதைய நிலை நெஞ்சை பதற வைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கவலை

india
By Nandhini Apr 27, 2021 07:09 AM GMT
Report

இந்தியாவில் தற்போதுள்ள நிலை நெஞ்சை மிகவும் பதற வைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது -

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை மனதை பதறவைக்கிறது. எங்களால் முடிந்த எல்லா உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம்.

இந்தியாவின் தற்போதைய நிலை நெஞ்சை பதற வைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கவலை | India

இந்தியாவிற்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கச் சுகாதார நிறுவனம் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை (ரத்தத்தில் குறைந்த அளவில் ஆக்சிஜன் இருக்கும் நபர்களுக்குப் பயன்படும் கருவி) இந்தியாவிற்கு அனுப்பி உள்ளது.

உலக சுகாதாரத்துறை சார்பாக 2,600 வல்லுநர்கள் இந்தியாவிற்கு வர இருக்கிறார்கள். அவர்கள் இந்திய சுகாதாரத்துறையோடு இணைந்து செயல்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.