கொரோனா பரவல் தடுப்பு குறித்து இந்தியா- ஜப்பான் பிரதமர்கள் திடீர் ஆலோசனை

india
By Nandhini Apr 26, 2021 01:24 PM GMT
Report

கொரோனாவைத் தடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் இன்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்திக் கொண்டனர்.

இது குறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில் கூறுகையில், கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும், இந்த உரையாடலில் இரு நாட்டின் உற்பத்தி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய ஒப்பந்தங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்கள்.

முன்னதாக, இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவதால் அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவைப் போல ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஜப்பானில் சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 14 கோடிக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 11 கோடிக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர் என்று ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு குறித்து இந்தியா- ஜப்பான் பிரதமர்கள் திடீர் ஆலோசனை | India